திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2026 05:07
திருவண்ணாமலை; அருணாச்சலேஸ்வரர் கோவிலில், நடந்த சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவ திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனார் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், இறைவனை ஒரு தோழனாகக் கருதி வழிபட்டவர். திருநெறிய தமிழ் வளர்த்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தனிச் சன்னதி உள்ளது. மேலும், ஆண்டுதோறும் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கென பிரத்யேக உற்சவம் நடைபெற்று, அவர் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படிஇன்று நடைபெற்ற விழாவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனார் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.