கோவிந்தவாடி மாரியம்மனுக்கு இன்று கூழ்வார்தல் திருவிழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2026 05:07
காஞ்சிபுரம்; கோவிந்தவாடி மாரியம்மனுக்கு கூழ்வார்தல் திருவிழா நாளை நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆடித்திருவிழா நேற்று தொடங்கியது. மாலையில், கிராம தேவதை ஏகாத்தம்மனுக்கு கிராம மக்கள் பொங்கலிட்டனர். மலர் அலங்காரத்தில் ஏகாத்தம்மன் வீதியுலா வந்தார். இன்று கரக ஊர்வலம் நடந்தது. நாளை காலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற உள்ளது. இரவு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும், நாடகமும் நடக்க உள்ளது.