Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழச்சித்திரை வீதி பாதுகாக்கப்பட்ட ... முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை தெப்பம் கட்டும் பணிகள் விறுவிறு முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனத்தின் பாரம்பரிய சுகாதார பூங்கா அமைக்கும் பணி : கவர்னர் துவக்கி வைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனத்தின் பாரம்பரிய சுகாதார பூங்கா அமைக்கும் பணி : கவர்னர் துவக்கி வைப்பு

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2026
09:07

காரைக்கால்: தருமபுரம் ஆதீனம் சார் பில் தன்வந்தரா ஒருங்கிணைந்த பாரம்பரிய சுகாதார பூங்கா அமைக்கும் பணியினை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.

காரைக்கால், திருநள்ளாறு, தருமபுரம் ஆதீன கட்டளை மடம் சார்பில் தன்வந்தரா ஒருங்கிணைந்த பாரம்பரிய சுகாதார பூங்கா மற்றும் பல்நோக்கு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

தருமபுரம் ஆதின 27வது குருமகா சந்நிதான கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலை வகித்தார். கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கி, வளர்ச்சி திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பால்கி ஜெயா லேப் இயக்குநர் ஈஸ்வர் ராஜலிங்கம் வரவேற்றார்.

உயர்கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் நோக்கில், சென்னையைச் சேர்ந்த அறம் ஐ.ஏ.எஸ். அகாடமியின் பங்களிப்புடன் ‘தருமை ஆதீனம் கேரியர் அகாடமி’ துவங்கப்பட்டது. மேலும், தன்வந்த்ரா ஆயுஷ் மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் மூலிகைப் பண்ணைத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய மருத்துவ முறைகள், ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார சேவைகளை ஒருங்கிணைக்கும் ‘பாரம்பரிய சுகாதார பூங்கா’ அமைக்கும் பணி துவங்கப்பட்டது.

இதில், அமைச்சர் ராஜசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் விக்னேஷ்வரன், மீனாட்சிசுந்தரம், பால்கி ஜெயா லேப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஞான சரவணன், கவர்னரின் செயலர் மணிகண்டன், கலெக்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் பேசுகையில், சமுதாய அறப்பணியை முன்னேடுத்த தருமபுர ஆதீனத்தை அரசு மற்றும் காரைக்கால் மக்கள் சார்பாக பாராட்டுகிறேன். ஆதீனத்தின் மூலம் மலிவு விலை உணவகம் துவங்கப்படுகிறது. இந்த உணவகத்தால் கோவிலை சுற்றி சிறு வியாபாரிகளின் உணவகங்கள் பாதிக்காமல் இருக்க மலிவு விலை உணவகத்தில் உட்கார்ந்து சாப்பிட மட்டும் இடம் அளித்து, பார்சல் தருவதை தவிர்க்க வேண்டும்.

முன்னோர்கள் விட்டு சென்ற சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகா, மூலிகை மருத்துவம் போன்ற மருத்துவத்தை மறந்து விடக் கூடாது என்ப தற்காக தான் ஆயுஷ் மருத்துவத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆன்மிகத்தையும், பாரம்பரிய மருத்துவத்தையும் ஒன்றாக இணைக்கும் தருமபுரம் ஆதீனம் எடுத்திருக் கும் முயற்சி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar