Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ... மன்னீஸ்வரர் கோவில் தல புராணம் வெளியிட முடிவு மன்னீஸ்வரர் கோவில் தல புராணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கோவிலில் தரிசனத்துக்கு ‘ஆன்லைன்’ புக்கிங்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குருவாயூர் கோவிலில் தரிசனத்துக்கு ‘ஆன்லைன்’ புக்கிங்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2026
01:07

பாலக்காடு: குருவாயூர் கோவிலில், மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்யும் நிலைக்கு, இனி முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. பக்தர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தை தேர்வு செய்து எளிதாக தரிசனம் செய்வதற்கான, ‘ஆன்லைன் புக்கிங்’ சேவையை குருவாயூர் கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.


இது குறித்து, நிர்வாக குழு தலைவர் கோபிநாத் கூறியதாவது: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் வசதியை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. ‘விர்ச்சுவல் கியூ’ முறையை பயன்படுத்தி பக்தர்களுக்கு சிரமமில்லாத, சுமுகமான தரிசனத்தை உறுதி செய்வதே இதன் முதன்மை நோக்கம். முதற்கட்டமாக, ஆக., 4ம் தேதி முதல் சோதனை முறையில், வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் இந்த ‘விர்ச்சுவல் கியூ’ புக்கிங் வசதியை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக பக்தர்கள் குருவாயூர் தேவஸ்தான வாரியத்தின் இணையதளமான https://guruvayurdevaswom.in என்ற முகவரியில் முன்பதிவு செய்யலாம். உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பக்தர்களின் வசதிக்காகவும் சுமுகமான தரிசனத்தை உறுதி செய்யவும் நிர்வாகக் குழு எடுத்த முடிவின்படி, இந்த ஆன்லைன் புக்கிங் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar