Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர் மலையில் ஆண்டுக்கு ஒருமுறை ... தும்பைபட்டி சங்கர நாராயணர் கோயிலில் ஆடி தபசு திருவிழா தும்பைபட்டி சங்கர நாராயணர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மாங்கனித்திருவிழா; பஞ்சமூர்த்திகளுக்கு விடையாற்றி உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்கால் மாங்கனித்திருவிழா; பஞ்சமூர்த்திகளுக்கு விடையாற்றி உற்சவம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2026
02:07

காரைக்கால்: காரைக்கால் மாங்கனி திருவிழாவின் இறுதி நாளான இன்று பஞ்சமூர்த்திகளுக்கு விடையாற்றி உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் மாங்கனி திருவிழா நடக்கும். இத்திருவிழா கடந்த 27ம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது.மறுநாள் காரைக்கால் அம்மையார் அன்று அழைக்கப்படும் புனிதவதியார் பரமதத்தர் திருக்கல்யாணமும்,முத்துப்பல்லக்கில் நகர்வலம் வருதல் நடந்தது.பரமதத்தர் தனது பணியாளர்களிடம் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்புதல், சிவபெருமான் காவியுடைருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவராக அவதரித்து, பவழக்கால் விமானத்தில் வீதி உலா வரும் போது பக்தர்கள் தன் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சியில் காரைக்கால் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒரு மாதம் தொடர்ந்து நடக்கும் காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவின் இறுதி நாளான இன்று விடையாற்றி உற்சவம் நடந்தது. இதற்காக பஞ்சமூர்த்திகளுக்கு பல்வேறு கிரவங்கள் மூலம் அபிஷேகம் நடத்தப்பட்டது. பஞ்சமூர்த்திகள் என அழைக்கப்படும் பிச்சாண்டவர்,அம்பாள், வள்ளி தெய்வாணை,சமேதராக முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர்,சண்டிகேஸ்வரி உற்சவர்களுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகங்கள் நடந்தது.பின் சந்தனம், மஞ்சள், பால், தேன், பன்னீர், அண்ணம், பழரசங்கள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோவில்தனி அதிகாரி விநாயகமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar