தும்பைபட்டி சங்கர நாராயணர் கோயிலில் ஆடி தபசு திருவிழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2026 02:07
மேலூர்: தும்பை பட்டி சங்கர நாராயணர் கோயிலில் ஆடி தபசு திருவிழா ஜூலை 19 கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று கோயில் வீட்டிலிருந்து பக்தர்கள் பால், பன்னீர், சந்தன குடங்களை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து வண்டியூர் திருக்கையிலாய மணி சோம சுப்பிரமணியர் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடத்தினார்.பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கர நாராயணர் கல்வி அன்னதானை அறக்கட்டளை நிர்வாகிகள், அர்ச்சகர் ராஜேஷ் கண்ணன் செய்திருந்தனர்.