Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை ஆனந்தசாயி கோவிலில் ... உடுமலை திருப்பதி கோவிலில் பவித்ர உத்ஸவம் பக்தர்கள் பங்கேற்பு உடுமலை திருப்பதி கோவிலில் பவித்ர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெக்கூரில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற முளைப்பாரி உற்சவ திருவிழா
எழுத்தின் அளவு:
தெக்கூரில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற முளைப்பாரி உற்சவ திருவிழா

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2026
11:07

மானாமதுரை: மானாமதுரை பெரியகோட்டை அருகே உள்ள தெக்கூரில் முளைப்பாரி உற்ஸவ திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி மகளிர் மற்றும் சிறுமிகள் கும்மி பாட்டு பாடி ஆடியபடி முளைப்பாரிகளை ஊர்வலமாக தூக்கி சென்று ஆற்றில் கரைத்தனர்.


மானாமதுரை பெரியகோட்டை அருகே உள்ள தெக்கூரில் உலகுடைய அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வருடம் தோறும் ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து, ஏராளமான மகளிர்கள் மற்றும் சிறுமிகள் முளைப்பாரிகளை வளர்க்க துவங்கினர்.இதையடுத்து தினந்தோறும் இரவு தெக்கூரில் உள்ள முளைக்கொட்டு திண்ணையில், பாரம்பரிய முறைப்படி கும்மி பாட்டு பாடி ஆடியபடியும், சிறுவர்கள் சிலம்பாட்டம் ஆடியபடியும், கும்மி கொட்டி அம்மனை வழிபட்டனர். மழை பெய்து, விவசாயம் செழிக்கவும், திருமணமாகதவர்களுக்கு திருமணம் நடைபெறவும், கிராம மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் இத்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து நேற்று மாலை முளைப்பாரிகளை மகளிர்கள் மற்றும் சிறுமிகள் புத்தாடைகள், நகைகள் அணிந்து ஊர்வலமாக தூக்கிக் கொண்டு கைலாசநாதர்-கோமதி அம்மன், உலகுடைய அம்மன் கோயில்களில் முளைப்பாரிகளை இறக்கி வைத்து வழிபாடு செய்த பின்னர் முளைப்பாரிகளை அருகில் உள்ள உப்பாற்றில் சென்று கரைத்தனர்.இந்த விழாவிற்காக வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்த தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊரான தெக்கூருக்கு வந்து முளைப்பாரி விழாவில் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருமலையில் நேற்று புதன்கிழமை இரவு பவுர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கா ஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வரதர் உற்சவர் சிலை சேதமடைந்துள்ளதால், நேற்று ... மேலும்
 
temple news
ஆடி மாதத்தின் பவுர்ணமி தினமான நேற்று சிருங்கேரி ஜகத்குரு பாரதீ தீர்த்த சுவாமிகள், விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் நேற்று மாலை தேரோட்டம் ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவிலில், சும்பன் – நிசும்பனை வதம் செய்யும் படுகள விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar