தீர்த்தவாரி முடிந்து கோயில் திரும்பினார் வீர அழகர்; உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2026 10:08
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் தீர்த்த வாரி முடிந்து வீர அழகர் கோயிலுக்கு திரும்பினார். இன்று உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
மானாமதுரை வீர அழகர் கோயிலில் கடந்த 21ஆம் தேதி ஆடி பிரம்மோற்சவ விழா கொடிகற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினம்தோறும் வீர அழகர் சர்வ அலங்காரங்களுடன் பல்வேறு வாகனங்களில் மண்டகப் பணிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த 26 ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக பட்டத்தரசி கிராமத்திற்கு எழுந்தருளி சக்கரத்தாழ்வாருக்கு தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்காரகுளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று காலை வீர அழகர் வெள்ளை குதிரை வாகனத்தில் பல்வேறு மண்டகப் பணிகளில் இளைஞர் எழுதிய பின்னர் கோயிலுக்கு சென்றடைந்தார். இன்று உற்சவ சாந்தியுடன் இந்த வருடத்திற்கான ஆடி பிரம்மோற்ஸவ விழா நிறைவு பெறுகிறது.