மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2026 11:08
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில், திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேல்மலையனுார், அங்காளம்மன் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை திரு விளக்கு பூஜை நடந்தது. அதை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு துர்கை அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் முன்பு 108 பெண்கள் குத்து விளக்கேற்றி திருவிளக்கு பூஜை செய்தனர். இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனையும், அர்ச்சனையும் நடந்தது. பெண்களுக்கு மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கினர். பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.