ஊட்டி: ஊட்டி புரந்தரதாசர் சங்கீத சபா கலைக்குழு சார்பில், ஊட்டி எல்க்ஹில் கோவிலில், கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவில், ஊட்டி இந்துநகர் பகுதியில் உள்ள புரந்தரதாசர் சங்கீத சபா கலைக்குழுவின் மாணவ, மாணவயரின் பக்தி இசை மற்றும் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாணவர்கள் விசால், கிருஷ்ணா, யஷ்வந்தி, ஜனனி, ரிதுவர்ஷினி ஆகியோரின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது. நீலகிரி மாவட்ட கலெக்டர் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினார். திருவிழாவிற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இசை நிகழ்ச்சியை ரசித்தனர்.