Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிக்கார்த்திகை, முருகனை ... சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ஆடிக்கார்த்திகை; தங்க கவசத்தில் சுவாமி சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி கிருத்திகை; திருத்தணி முருகன் கோயிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ஆடி கிருத்திகை; திருத்தணி முருகன் கோயிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

06 ஆக
2026
10:08

திருத்தணி; ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் விழாக்கோலம்: காவடிகளுடன் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி ஆடி கிருத்திகையையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் அதிகாலை முதல் மலைக் கோவிலில் குவிந்து வருகின்றனர்.  இதனால் மலைக்கோயில் தேர் வீதியில் காவடிகளுடன் பக்தர்கள் கூட்டம் விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பொது வழியில் சுமார் 5 மணி நேரமும், ரூபாய் 100 சிறப்பு கட்டண வழியில் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆடி மாத முதல் கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் சுவாமிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. மேலும் காவடி மண்டபத்தில் வள்ளி- தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருவதால் காவடி சுமந்து வந்த பக்தர்கள் காவடி மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு காவடிகள் செலுத்தி வருகின்றனர். ஆடி மாதம் முதல் கிருத்திகையில் ஏராளமானோர் காவடி சுமந்து வருவதால் மலைக்கோவில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . ஆடி மாதம் முதல் கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள்  மலைப்பாதை வழியாக மலைக்கோயிலில் குவிந்து வருகின்றனர். ஏராளமான வாகனங்களில் கோயிலுக்கு வருவதால் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் மலை அடிவாரத்தில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு திருக்கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட  பேருந்துகளில் மற்றும் நடந்தும் மலை கோயிலுக்கு பக்தர்கள் வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்துள்ள நிலையில் போலீசார் மிக குறைவாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், பக்தர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மொரட்டாண்டி; உலகிலேயே மிக உயரமான  72 அடி உயர கொண்ட ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா காளிக்கு ஆடி மாத நான்காம் ... மேலும்
 
temple news
திருவாரூர்; மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் செங்கமலத்தாயார் ஆடிப்பூரம் திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள 12 அடி முருகன் சிலைக்கு ஆடி ... மேலும்
 
temple news
கோவை;  கோவை, பெரியகடை வீதி மாகளியம்மன் கோவிலில் 500 கிலோ நவதானியத்தினால் ராகு கேது அலங்காரம் ... மேலும்
 
temple news
திருத்தணி; முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழாவில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar