Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏரி கருப்பராயன் சுவாமி, சப்த ... ஆடி கிருத்திகை; திருத்தணி முருகன் கோயிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் ஆடி கிருத்திகை; திருத்தணி முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிக்கார்த்திகை, முருகனை வழிபட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடிக்கார்த்திகை, முருகனை வழிபட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும்!

பதிவு செய்த நாள்

06 ஆக
2026
10:08

ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் சொல்லப்படுகிறது. ஏன்?  முருகனின் கரத்தில் இருக்கும் வேல், சக்தி ஆயுதம் எனப்படும். அம்பிகையின் அம்சமே வேல் எனவும் சொல்வர். அதனால்  சக்திதரனாகிய முருகனுக்கும் ஆடியில் ஒருநாள் சிறப்பானதாகிவிட்டது. கந்தனைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால், கிருத்திகை  தினமே கார்த்திகேயனுக்கு உரியதாகி விட்டது. ஆடிக்கிருத்திகை நாளில் முருக பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும்,  பாலபிஷேகம் முதலியன செய்தும் ஆறுமுகனை ஆராதிப்பார்கள். பல கோயில்களில் முழுக்க முழுக்க மலர்களாலேயே  அலங்கரிப்பதும் உண்டு. அம்மன் ஆலயங்களில் இது பூச்சொரிதல் என்றும், முருகன் கோயில்களில் மலர் முழுக்கு என்றும்  அழைக்கப்படுகிறது. ஆடிக் கிருத்திகை வழிபாட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும் என்பது ஐதிகம்.


முருகப்பெருமானின் வரலாற்றை தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணம் என்னும் நுõலாக இயற்றியுள்ளார். சிவபெருமான் தன் ஐந்து  முகங்களோடு ஆறாவது முகமான அதோமுகத்தையும் சேர்த்து, ஆறு முகங்களிலும் <உள்ள நெற்றிக்கண்களில் இருந்து நெருப்புப்பொறியை சிந் தினார். அப்பொறிகளை வாயுவும், அக்னியும் கங்கையில் சேர்த்தனர். ஆறுதாமரை மலர்களில் ஆறுகுழந்தைகள் உருவாயின. அக்குழந்தைகளை  வளர்க்கும் பொறுப்பை சிவன் கார்த்திகைப் பெண்கள் ஆறுபேரிடம் ஒப்படைத்தார்.  பிள்ளைகள்  ஆறுபேரையும் காணவந்த  பார்வதி  ஆறுமுகத்தையும் ஒருமுகமாக்கினாள். அப்பிள்ளைக்கு கந்தன் என்ற திருநாமம் உண்டானது. சிவபெருமான் முருகனை வளர்த்து ஆளாக்கிய  கார்த்திகைப் பெண்களிடம், “நம் பிள்ளையை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்கிய நீங்கள் அனைவரும் வானில் நட்சத்திரமாக நிலைத்து  வாழ்வீர்கள். உங்களை நினைவுபடுத்தும் வகையில் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் இனி உலகில்  வழங்கும். கார்த்திகை நாளில் முருகனுக்கு விரதமிருந்து வழிபடுவோர் எல்லா சவுபாக்கியங்களையும் பெறுவார்கள் என்று  அருள்புரிந்தார்.  முருகனின் வரலாற்றை கூறும் கந்தபுராணத்தை  படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மஹாராஷ்டிராவில் விஜய யாத்திரை மேற்கொண்ட சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar