மொண்டிபாளையம் மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2026 04:08
அன்னூர்; மொண்டிபாளையம் மகா பைரவர் கோவிலில் மழை வேண்டி 108 கலச அபிஷேகம் நடந்தது.
மொண்டிபாளையம் அருகே, திம்மநாயக்கன்புதூரில், மகா பைரவர் கோவில் மற்றும் நவ பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. நேற்று இரவு 7:30 மணிக்கு வேள்வி யாகம் துவங்கியது. இதையடுத்து கோ பூஜை, அஸ்வ பூஜை, சுவான பூஜை நடந்தது. உலக அமைதிக்காகவும், மழை வர வேண்டியும், பைரவ உற்சவமூர்த்திக்கு 108 கலசங்களால் தீர்த்த அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் தங்கள் கரங்களால் தீர்த்த அபிஷேகம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.