Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பு.கொணாலவாடியில் அய்யனார் கருமி ... விருத்தாசலம் கோவில்களில் ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு விருத்தாசலம் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை கோவில்களில் ஆடி கிருத்திகை விழா; வடபழனியில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை கோவில்களில் ஆடி கிருத்திகை விழா; வடபழனியில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

06 ஆக
2026
03:08

சென்னை, புறநகரில் உள்ள முருகப் பெருமான் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றினர்.


சூரனை அழித்து, தேவர்களைக் காத்த; ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாக, கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப் படுகிறது.


முருகப்பெருமானுக்கான பிரதான விழாவாக கருதப்படும் ஆடி கிருத்திகை விழா சென்னை, புறநகரில் உள்ள முருகன் கோவில்களில் விமர்சையாக விழா எடுக்கப்படுகிறது. 


வடபழனி முருகன்  கோவில்:   வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3:30 மணிக்கு பள்ளியெழுச்சி பூஜைகள் நடந்தன. காலை 5:00 மணி முதல் நண்பகல், 12:00 மணிவரை சந்தன காப்பு அலங்காரமும்; உச்சிகால அபிஷேகம் முடிந்ததும், பிற்பகல், 1:00 மணி முதல் மாலை,4:00 மணிவரை ராஜ அலங்காரமும் மூலவருக்கு செய்யப்பட்டிருந்தது. சாயரக்‌ஷை பூஜை, அபிஷேகம் முடிந்ததும், மாலை 5:00 மணி முதல் இரவு, 11:00 மணிவரை புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை ஐந்து மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவியத்தொடங்கினர்.  முதியோர், கர்ப்பிணி பெண்கள், மாற்று திறனாளிகளுக்கு தனி வழித்தடம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து, பால்குடம் ஏந்தி, அலகு குத்தி பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றினர். அவர்களுக்கும் தனி வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது. இரவு வள்ளி,தேவசேனா சமேதராக சுப்பிரமணிய சுவாமி மயில் வாகத்தின் மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.


அதேபோல, பிராட்வே கந்தக்கோட்டம், வானகரம், மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் கோவில், பெசன்ட்நகர் அறுபடைவீடு முருகன், குரோம்பேட்டை குமரன் குன்று, குன்றத்துார் முருகன் ஆகிய கோவில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. -நமது நிருபர்-

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar