ஆடி அமாவாசை; ராமேஸ்வரம் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2026 04:08
ராமேஸ்வரம்: நாளை ஆடி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கட்டண தரிசனம் ரத்து செய்து, அனைத்தும் பொது தரிசனமாக மாற்றப்பட்டது.
ஆக., 5ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணம் விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய விழாவான ஆடி அமாவாசையான நாளை தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகை தந்து அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுவார்கள். பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க 2025 முதல் கட்டண தரிசன வரிசையை தமிழக அரசு ரத்து செய்தது. அதன்படி ஆடி அமாவாசைக்கும் சுவாமி, அம்மனை தரிசிக்க சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 100, 200ஐ ரத்து செய்து, அனைத்து வழியிலும் பொது தரிசனமாக பக்தர்கள் தரிசிக்கலாம். ஆனால் கோயிலில் 22 தீர்த்தங்களை நீராட ஒரு நபருக்கு ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.