திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் யானை அபிராமிக்கு சிறப்பு பூஜை.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2026 12:08
மயிலாடுதுறை: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் யானை அபிராமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. உலக யானைகள் தினத்தை முன்னிட்டு இந்த கோவிலில் உள்ள யானை அபிராமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. யானைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவியதோடு தீபாராதனை எடுத்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் யானைக்கு பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை கோயில் உள்துறை சூப்பிரண்டு விருதகிரி மற்றும் நிர்வாகத்தினர் வழங்கினர். பூஜைகளை கணேஷ் குருக்கள் தலைமையிலானோர் செய்து வைத்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் யானை அபிராமிக்கு பழங்கள் கொடுத்து ஆசி பெற்றதுடன், செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.