Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழி சட்டை நாதர் கோவில் ... மேலவல்லம் பிரத்தியங்கிரா தேவி கோவில் நிகும்பலா யாகம் மேலவல்லம் பிரத்தியங்கிரா தேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குத்தாலம் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குத்தாலம் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

பதிவு செய்த நாள்

13 ஆக
2026
10:08

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே செங்கமலத் தாயார் சமேத ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் ஆடி பிரும்மோத்ஸவ திருவிழா. ஐந்தாம் நாள் உற்சவமான திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருத்துருத்தி என்கின்ற குத்தாலத்தில் பிரசித்திப்பெற்ற செங்கமலத் தாயார் சமேத ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் ஆடி பிரம்மோத்ஸவ திருவிழா கடந்த எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் சேஷ வாகனம்,குதிரை வாகனம்,அனுமந்த வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வந்தது. ஐந்தாம் நாள் உற்சவமான திருக்கல்யாண உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.  ஏராளமான பெண்கள் ஆலயத்திற்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். ஸ்ரீதேவி, பூதேவி உடனாகிய செங்கமலத் தாயார் சமேத ஆதிகேசவப் பெருமாள் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருள சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டு பின்னர் மாலை மாற்றுதல் உற்சவம், கன்னிகாதானம் செய்யப்பட்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டுச் சென்றனர் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar