ஆடி அமாவாசை; சரபோஜி அலங்காரத்தில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2026 05:08
செம்பட்டி: அக்கரைப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை குகையில், சடையாண்டி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசையில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து 200 அடி உயரத்தில் உள்ள மூலவரை வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று துவங்கியது. அடிவாரம் மலை குகை கோயில் ஆகிய இடங்களில், மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பறவை காவடி, பால் காவடி, நீண்ட அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு சரபோஜி அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. உற்சவர் கோதண்டராமருக்கு, சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
* தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், குட்டத்துப்பட்டி சாய்பாபா நகர் பிச்சை சித்தர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.