ஆடி வெள்ளி கோலாகலம்; வளையல் அலங்காரத்தில் முத்தாலம்மன் அருள்பாலிப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2026 04:08
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி அபிஷேக ஆராதனைகள், வளையல் அலங்காரம் நடந்தது.
ஆடி 5வது கடைசி வெள்ளிக் கிழமையில் முத்தாலம்மன் கோயிலில் ஏராளமானோர் பால் ஊற்றினர். தொடர்ந்து பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்து பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆடிப்பூரத்தை ஒட்டி மூலவருக்கு வெள்ளி கவசம் சாற்றி, பல ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பரமக்குடி மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் நடந்து வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் பரமக்குடியில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன.