நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு; அம்மனுக்கு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2026 02:08
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம், புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து,சிறப்பு அலங்காரத்தில் புவனாம்பிகை அம்மன் அருள்பாலித்தார். அம்மனிடம் வைத்து பூஜை செய்த வளையல்களை பக்தர்களுக்கு வழங்கினர். பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.கைலாசநாதர், நடனபாதேஸ்வரர், வரசித்தி விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.