Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் பூலோகநாதர் ... சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றம் சிதம்பரம் நடராஜர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

15 ஆக
2026
02:08

மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், 55வது ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.


மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 55வது ஆண்டு ஆடிப்பூர விழாவையொட்டி நேற்று, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து, ஆதிபராசக்தி அம்மன் மற்றும் பங்காரு அடிகளார் திருவுருவ சிலைக்கு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, மங்கல இசையுடன் மேலதாளங்கள் ஒலிக்க, சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின், பங்காரு அடிகளார் திருப்பாதுகைகளுக்கு பாத பூஜையும், சுயம்பு அம்மனுக்கு கஞ்சி வார்த்தலும் நடந்தது. இதில், செவ்வாடை பக்தர்கள், கஞ்சி கலயம் எடுத்துவந்து அம்மனை வழிபட்டனர். அதன்பின், சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேக விழாவை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர், அதிகாலை 12:05 மணிக்கு தொடங்கி வைத்தனர். இதில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், முருகேசன், தெற்கு ரயில்வே ஓய்வு பெற்ற பொது மேலாளர் ஜெயந்த் உள்ளிட்ட மாவட்ட நீதிபதிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, பாலாபிஷேகம் இன்று மாலை வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோயம்புத்துார், திருப்பூர் மாவட்டங்களின் நிர்வாகிகள் மணி, சரஸ்வதி சதாசிவம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். செங்கல்பட்டு மாவட்ட போலீசார் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar