கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடி மாத சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2026 11:08
கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடி மாத சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இக்கோயிலில் புரட்டாசி மட்டுமின்றி அனைத்து மாத சனிக்கிழமைகளிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி மாத சனிக்கிழமையான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதிர் நரசிங்க பெருமாள், மூலவர் ராமானுஜருக்கு திருமஞ்சனம், விஸ்வரூப பூஜைகள் நடந்தது. மேலும் பால், பழம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
அருகிலுள்ள ஆஞ்சநேயர் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.