கோவில்பட்டி:கோவில்பட்டி நடராஜபுரம் பத்திரகாளியம்மன் கோயில் கொடை விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி 21 அக்னிச்சட்டி எடுத்து சிறப்பு பூஜைகள் நடந்தது.கோவில்பட்டி நடராஜபுரம் தெரு பெருங்குளம் அன்னை ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் பொங்கல் மற்றும் கொடை விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் உலக மக்கள் நலன் மற்றும் மழை வேண்டி இருக்கன்குடி அம்மன் பாலகர் வெங்கடாசலம் 21 அக்னிச்சட்டி எடுத்து சிறப்பு பூஜைகள் செய்தார். இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கன் தலைமை வகித்தார். அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன் முன்னிலை வகித்தார். கந்தன் வரவேற்றார். தொடர்ந்து கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர்ராஜூ மற்றும் நகராட்சி சேர்மன் ஜான்சிராணி சங்கரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு அக்னிச்சட்டி சிறப்பு பூஜைகளை துவக்கி வைத்தனர். தொடர்ந்து அக்னிச்சட்டி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. அய்யாமணி நன்றி கூறினார். விழாவில் நகராட்சி துணை சேர்மன் ராமர், அதிமுக மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனரணி செயலாளர் சங்கரபாண்டியன், மணிகண்டன் உள்பட விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.