செய்துங்கநல்லூர்:வசவப்பபுரம் முறாம்டீஸ்வரர் கோடூலில் 5வது வருஷாபிஷேக விழா நடந்தது.கருங்குளம் யூனியன் வசவப்பபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முறாம்டீஸ்வரர் சமேத சிவகாமி அம்மாள் கோவிலில் 5வது வருஷாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு காலை 10 மணிக்கு கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு முருகன், சாஸ்தா, நடராஜர், கால பைரவர், நந்தி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு 11 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் விமானங்களுக்கு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. இந்த பூஜைகளை பட்டர்கள், இசக்கியப்பன், பெருமாள், சிவா, நவீன் ஆகியோர் செய்தனர். இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வசவப்பபுரம் கந்தசாமி செய்திருந்தார்.