Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் உலுப்பகுடி பேச்சியம்மன் ... அன்னூர் கருப்பராயன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம் அன்னூர் கருப்பராயன் சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரிட்டனில் இருந்து மீட்கப்பட்ட ஆழ்வாரின் சிலை முதல்வர் விஜய் நேரில் பார்வை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரிட்டனில் இருந்து மீட்கப்பட்ட ஆழ்வாரின் சிலை முதல்வர் விஜய் நேரில் பார்வை

பதிவு செய்த நாள்

19 ஆக
2026
10:08

சென்னை: பிரிட்டனில் இருந்து மீட்கபட்ட, திருமங்கை ஆழ்வாரின் வெண்கல சிலையை, முதல்வர் விஜய் நேற்று பார்வையிட்டார்.


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில், 1957 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில், திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை, காளிங்கநர்த்தனர் கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி லோகச் சிலை ஆகியவை திருடு போயின. இது குறித்து, கடந்த 2020ம் ஆண்டு கோவில் செயல் அலுவலர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை, பிரிட்டன் நாட்டின் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இச்சிலையை, அருங்காட்சியகம் 1967ம் ஆண்டு அடையாளம் தெரியாத நபரிடம் வாங்கியுள்ளது. சிலை திருட்டு தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகள், திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை தொடர்பான ஆதாரங்களை சேகரித்து, பிரிட்டன் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.


அவற்றின் அடிப்படையில், திருமங்கை ஆழ்வார் சிலையை, மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் அரசு முன்வந்தது. பின்னர் துாதரக நடவடிக்கை வழியே, ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தின் பாதுகாப்பில் இருந்த, திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை, தமிழகத்திற்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்து மீட்கப்பட்ட, திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையை, முதல்வர் விஜயிடம், டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., கல்பனா நாயக் உள்ளிட்டோர் காண்பித்தனர். அப்போது, சிலையை பார்வையிட்ட முதல்வர் விஜய், சிலை திருட்டு தடுப்பு பிரிவினருக்கு, பாராட்டு தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar