Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ... விழுப்புரம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத வழிபாடு விழுப்புரம் தர்மசாஸ்தா ஐயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செப்.17 ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; செப்.,6 முதல் பூஜைகள் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 செப்.17 ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; செப்.,6 முதல் பூஜைகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

19 ஆக
2026
05:08

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.,17ல் நடப்பதை முன்னிட்டு செப்.,6 முதல் கும்பாபிஷேகம் தொடர்பான பூஜைகளும், செப்.,11 முதல் 17 காலை வரை யாகசாலை பூஜையும் நடக்கிறது. திருப்பணிகளுக்காக உபயதாரர்கள் மூலம் ரூ.21 கோடி பெறப்பட்டுள்ளது.


மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் 2009 ஏப்ரலில் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் 2018 பிப்.,2ல் கோயிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நடத்தப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் சீரமைப்பு பணிகள் துவங்கினாலும் கொரோனா ஊரடங்கு, தகுந்த கற்கள் கிடைக்காமை போன்ற காரணங்களால் வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகள் முடங்கின. கடந்த தி.மு.க., ஆட்சியில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டதோடு, கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளும் தொடங்கப்பட்டன. கோயில் நிதி ரூ.15.81 கோடி, உபயதாரர் நிதி ரூ.5.16 கோடி என மொத்தம் ரூ.32.28 கோடியில் பணிகள் நடந்தன. திருப்பணி, யாகசாலை பூஜை என உபயதாரர்களிடம் ரூ.21 கோடி பெறப்பட்டது. 


கும்பாபிஷேகம் நேரம்;  17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செப்.,17 காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் நடக்கிறது. இதையொட்டி செப்.,6ல் காலை 7:00 மணிக்கு கும்பாபிஷேகம் தொடர்பான பூஜை துவங்குகிறது. செப்.,7ல் கோயில் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை நவகோள் யாகவேள்வி நடக்கிறது. செப்.,8 வாஸ்து சாந்தி, 9ம் தேதி வைகையில் இருந்து புனித நீர் எடுத்தல், அன்று மாலை புனித மண் எடுத்தல், 10ம் தேதி பேரொளி வழிபாடு, மாலையில் முளைப்பாரி இடுதல் நடக்கிறது.


செப்.,11மாலை முதல்கால யாகசாலை பூஜை துவங்குகிறது. செப்.,17 வரை மொத்தம் 12 கால யாகசாலை பூஜை நடக்கிறது. செப்.,17ம் தேதி காலை 7:40 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க விமானங்களுக்கும், ராஜகோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 7:55 மணிக்கு அம்மன் மூலஸ்தானத்திற்கும், காலை 8:10 மணிக்கு சுந்தரேஸ்வரர் மூலஸ்தானத்திற்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. ராஜா பட்டர் தலைமையில் ஸ்தானீக பட்டர்கள் ஹாலாஸ்ய நாதன், வேலாயுதம், சுவாமிநாதன் உள்ளிட்டோர் கும்பாபிஷேக சடங்குகளை செய்கின்றனர். அமைச்சர்கள் ரமேஷ், நிர்மல்குமார், விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள் மற்றும் 11 ஆதினங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar