Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காட்டூர் கன்னிமார் கருப்பராயர் ... உக்கடம் ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் உக்கடம் ஜலகண்டேஸ்வரர் சித்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருந்தோட்டம் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெருந்தோட்டம் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

19 ஆக
2026
10:08

மயிலாடுதுறை: பெருந்தோட்டம் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பெருந்தோட்டம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த செங்கமலவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. அபிமான ஸ்தலம். குமுதவல்லி நாச்சியார் விருப்பப்படி திருமங்கை ஆழ்வார் தினமும் 1008 வைணவர்களுக்கு அன்னதானம் செய்து வந்தார். அதற்கான காய்கறிகள் விளைவிக்க பரந்த தோட்டத்தை அமைத்தார். அந்த பெரிய தோட்டமே தற்போது பெருந்தோட்டம் என்ற பெயரால் வழங்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க பெருந்தோட்டத்தில் ஆதி கேசவப் பெருமாள், செங்கமலவல்லி தாயார், கருடாழ்வார் தனி தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றனர். இக்கோவிலில் உள்ள பழமை வாய்ந்த கிணற்றில் நீராடி பெருமாளை சேவிக்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி பூர்வாங்க  பூஜைகள் செய்து முடிக்கப்பட்டு 18ஆம் தேதி முதல் காலை யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை கோ பூஜை, மண்டல பிம்ப அக்னி ஆராதனம் செய்யப்பட்டு மூன்றாம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாஹுதி நடந்தது. இதனை அடுத்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் தலைமையில்  சர்வ சாதகம் மன்னார்குடி பிரசன்ன வெங்கடேச தீக்ஷிதர்  உள்ளிட்டோர் வேத மந்திரங்கள் ஓதி பெருமாள், தாயார், கருடாழ்வார் சன்னதி விமான கலசங்களில் புனித நீர் சேர்த்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை செயல் அலுவலர் முருகன் மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar