உக்கடம் ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2026 10:08
கோவை ; ஆவணி மாதம் வளர்பிறை சஷ்டி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பை பாஸ் ரோடு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் விபூதி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த முருகப்பெருமான் அருள்பாலித்தார். சப்தமி திதியையொட்டி ஜலகண்டேஸ்வரர் கோயில் உள்ள அஷ்ட நாகங்கள் மற்றும் தேவதைகளுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது. மஞ்சள் மற்றும் குங்கும காப்பு அலங்காரத்தில் நாக தெய்வங்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.