Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » நாராயண தீர்த்தர்
நாராயண தீர்த்தர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 பிப்
2011
17:20

கிருஷ்ணலீலா தரங்கிணி என்னும் இசைப்பாடல் தொகுப்பை எழுதிய நாராயணதீர்த்தரின் 268வது ஆராதனை விழா, தஞ்சாவூர் மாவட்டம் திருப்பூந்துருத்தியில் பிப்.6ல் தொடங்குகிறது. ஆந்திரா, குண்டூர் அருகிலுள்ள காறா கிராமத்தில் நீலகண்ட சாஸ்திரி, பார்வதியம்மா தம்பதிக்கு 1675ல் கோவிந்த சாஸ்திரி பிறந்தார். வாசுதேவ பண்டிதரிடம் வேதம் பயின்றார். இளமையிலேயே இசை ஆர்வம் கொண்டார். உச்சம்மாவை திருமணம் செய்தார். ஒருசமயம், கிருஷ்ணா நதி வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவர் அணிந்திருந்த பூணூல்  வெள்ளத்தில் சென்று விட்டது. ஒருவழியாக கரை ஒதுங்கினார். அங்கிருந்த குகையில் 12 ஆண்டுகள் தியானத்தில் ஆழ்ந்தார். பின்னர் காசி சென்று, சிவராமாநந்தரிடம் சந்நியாச தீட்சை பெற்றார். பின், இவர் நாராயணதீர்த்தர் எனப்பட்டார். குருவின் வழிகாட்டுதல்படி, பாடல்களை இசைத்தபடியே, தீர்த்தயாத்திரையாக திருப்பதி வந்தார். பிறகு, காவிரிக்கரையிலுள்ள திருவீசலூர் வந்தார். அங்கு போதேந்திர சரஸ்வதி சுவாமி, அவரின் சீடரான ஸ்ரீதர ஐயாவாள் எழுதிய சித்தாந்த நூல்களைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார். கடவுளின் நாமத்தை ஜபிப்பதாலும், இசையாலும் கடவுளை அடைய முடியும் என்ற உண்மையை அறிந்தார். ஒருநாள் நடுக்காவிரி என்னும் கிராமத்தில், வயிற்றுவலி வந்து துடித்தபோது, திருப்பதி வெங்கடேசரை தியானித்தார். அன்றிரவு கனவில் தோன்றிய பெருமாள், தீர்த்தரே! நாளை காலை எது உம் கண்ணில் முதலாவதாகப் படுகிறதோ, அதைப் பின்தொடர்வீராக, என அருள்பாலித்தார்.மறுநாள் காலையில், பன்றி ஒன்றைக் கண்டு, அதனைப் பின் தொடர்ந்தார். 5 கி.மீ., கடந்து, பூபதிராஜபுரம் என்னும் இடத்திற்கு வந்த போது, பன்றி மறைந்தது. தீர்த்தர் அங்கிருந்த மண்டபத்தில் தியானத்தில் ஆழ்ந்தார். எட்டாம் நாளில், ஆவணி தேய்பிறை அஷ்டமி நாளில் இறை தரிசனம் பெற்று உடல்நலம் பெற்றார். அங்கு பூமியைத் தோண்டியபோது, லட்சுமிநாராயணரும், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வெங்கடேசப் பெருமாள் சிலைகள் கிடைத்தன. விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்து, பக்தி பரவசத்துடன் பாடல்களை இயற்றினார். ஒவ்வொரு நாளும் இயற்றிய பாடல்களை, இரவில் பெருமாளின் முன் பாடுவார். ஒருநாள் நாட்டை ராகத்தில், ஜய ஜய ரமாநாத ஜய ஜய த்ராநாத ஜயஜய வராஹபுர ஸ்ரீ வெங்கடேச..... என்ற பாடலைப் பாடிய போது, திரையிட்டிருந்த பெருமாளின் சந்நிதியில் சலங்கை ஒலி கிங்கிணீ எனக் கேட்டது. ஆச்சர்யம் கொண்ட தீர்த்தர், ஆனந்த கண்ணீர் பெருக்கி மகிழ்ந்தார். தான் எழுதிய பாடல்களை, கிருஷ்ண லீலா தரங்கிணி என்ற நூலாகத் தொகுத்தார். பாரிஜாதாபஹரணம் என்னும் நாட்டிய நாடகத்தை எழுதினார். பூபதி ராஜபுரத்தில் கோகுலாஷ்டமி விழா முறையை வகுத்து உறியடி உற்சவத்தை நடத்தினார். பூபதிராஜபுரம் என்னும் இத்தலம், பன்றி(வராகம்) காட்டிக் கொடுத்த தலம் என்பதால் வரகூர் என பெயர் பெற்றது. வரகூரில் வாழ்ந்த தீர்த்தர், திருப்பூந்துருத்தியில் 1745ல் மாசி வளர்பிறை அஷ்டமியில் சித்தி அடைந்தார். அவரது ஆராதனை விழா ஆண்டு தோறும் மாசி வளர்பிறை அஷ்டமியில் திருப்பூந்துருத்தியில் நடக்கிறது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.