திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூரில் அருளானந்தர் ஆலயத்தில் மறைசாட்சி பெருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடந்தது. ஓரியூரில் அருளானந்தர் ஆலயம் உள்ளது. இங்கு ஜன., 2ம் தேதி, மறைசாட்சி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு நடந்தது. திண்டுக்கல்லில் இருந்து ரதயாத்திரையாக வந்த புனித அருளானந்தர், ஓரியூர் புனித அருளானந்தர் ஆகிய இரு தேர்கள் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. பாதிரியார் டார்வின் எஸ்.மைக்கேல் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இனிகோ படிப்பக இயக்குநர் ஜெரோம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.