Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வில்லியனூர் திருக்காமீஸ்வரர் ... 66 கிலோ தங்கம் 335 கிலோ வெள்ளி நகைகளால் ஜொலிக்கும் விநாயகர்; ரூ.703 கோடியில் காப்பீடு 66 கிலோ தங்கம் 335 கிலோ வெள்ளி நகைகளால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் கல் எனக் கூறி பவளப் பாறைகள் பெயர்ப்பு : இடியும் தருவாயில் தனுஷ்கோடி சர்ச்
எழுத்தின் அளவு:
ராமர் கல் எனக் கூறி பவளப் பாறைகள் பெயர்ப்பு : இடியும் தருவாயில் தனுஷ்கோடி சர்ச்

பதிவு செய்த நாள்

07 செப்
2026
05:09

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் சர்ச்சில் உள்ள பவளப் பாறைகளை சிலர் பெயர்த்து சுற்றுலா பயணிகளிடம் ராமரின் கல் என விற்பதால், இடியும் தருவாயில் சர்ச் உள்ளது.


1914ல் ஆங்கிலேயர்கள் சென்னை டு தனுஷ்கோடி வரை போட் மெயில் ரயில் போக்குவரத்தை துவக்கினர். அக்கால கட்டத்தில் தனுஷ்கோடி கடலில் மிதந்து கரை ஒதுங்கும் பவளப்பாறைகள் மற்றும் சுண்ணாம்பு கலவைகள் மூலம் மாதா சர்ச் அமைத்தனர். இங்கு 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி உள்ள ரயில்வே ஸ்டேஷன், தபால் நிலையம், தங்கும் விடுதிகள் இடிந்து தரைமட்டமானது. இதில் மாதா சர்ச் மேற்கூரை இடிந்து போனாலும், சுற்றுச்சுவருடன் கம்பீரமாக காட்சியளித்தது.  வரலாற்று அரிச்சுவடாக உள்ள இந்த சர்ச்சை தற்போது வரை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். ஆனால் ஒருசிலர் சர்ச் கிழக்கு, தெற்கு சுவரில் உள்ள பவளப்பாறைகளை பெயர்த்து எடுத்து, தனுஷ்கோடி முதல் இலங்கை வரை ஸ்ரீ ராமர் அமைத்த பாலத்தின் மிதக்கும் கல் இதுதான் எனக் கூறி, வடமாநில சுற்றுலா பயணிகளிடம் ஒரு கல்லை ரூ.1000, 2000க்கு விற்கின்றனர். இதனால் சர்ச் முழுவதும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே பவளப்பாறைகளை பெயர்க்கும் ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுத்து, சர்ச்சை புதுப்பித்து பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து சுற்றுலாவை மேம்படுத்த முன்வர வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா குடமுழுக்கு விழாவில் இன்று ஆடி வீதி, கம்பத்தடி மண்டபத்தில் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்;  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா எட்டாவது நாள் சுவாமி ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையைச் சேர்ந்த ஜிஎஸ்பி சேவா மண்டல் விநாயகர் சிலைக்கு 66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளி நகைகளால் ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் உட்பிரகார மகா மண்டபத்தில் உள்ள சிவன் சன்னதியில் வெள்ளி தகடுகள் பதிக்கும் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் பானை மீது தொடர்ந்து 20 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடி 131 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar