சிவ பூஜை அலங்காரத்தில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2026 04:09
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிவ பூஜை செய்யும் அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். செப்.,5 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி காலையில் வெள்ளிக் கேடகத்தில் விநாயகர் எழுந்தருளி புறப்பாடு நடக்கிறது. இரவில் வாகனங்களில் விநாயகர் எழுந்தருளி திருவீதி வலம் நடக்கிறது. விழாவில் இன்று சிவ பூஜை அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.