Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோத்தகிரி கோவில்களில் அமாவாசை ... திருப்போரூர் துலுக்காணத்தம்மன் கோவிலில் பால்குட விழா விமரிசை திருப்போரூர் துலுக்காணத்தம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு

பதிவு செய்த நாள்

11 செப்
2026
03:09

மதுரை; மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் எதிர்வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள்ளாக நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை காண்பதற்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் வசதிக்காக இந்து சமய அறநிலைத்துறை, மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி உள்ளிட்ட அரசுத்துறைகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கும்பாபிஷேக தினத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொதுமக்கள் மேற்கூரையில் ஏறுவதற்கு அனுமதிக்க கூடாது என மாநகராட்சி நிர்வாகம் கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது.  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுற்றி உள்ள சித்திரை ஆவணி மாசி வீதிகளில் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன.  பொதுமக்களின் பாதுகாப்பு, மின்சார கம்பிகள் வழித்தடம் மற்றும் கட்டிடங்களின் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலை சுற்றி மூன்று அடுக்குகளாக உள்ள சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள் உள்ளிட்ட வீதிகளில் கட்டடங்களில் பொதுமக்களை அனுமதிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (செப்.,11) மாலை யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் அருள்மொழி நாதர் கோயிலில் மன்னர்கள் பட்டம் சூட்டிய ‘கவுரி பீடத்தில்’ ... மேலும்
 
temple news
சென்னை: பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், அர்ச்சகர் மற்றும் கைங்கர்ய பணியிடங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஒக்கப்பிறந்தான் குளம் தெரு, வேணுகோபால சுவாமி பஜனை கோவிலில் கிருஷ்ண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar