தாரக என்ற சொல்லுக்கு நுண்ணிய, நுட்பமான, உயர்ந்த என்று பொருளுண்டு. இறைவனுடைய திருநாமத்தை அதற்குரிய பீஜாட்சர மந்திரத்துடன் சேர்த்து உச்சரித்தால் சக்தி அதிகம். உடனடியாக பலன் கிடைக்கும். இத்தகைய உயர்ந்த மந்திரத்தையே தாரகமந்திரம் என்பர். இவற்றைப் புத்தகத்தைப் பார்த்துப் படித்து ஜெபிக்கக் கூடாது. உச்சரிப்பு பிழை ஏற்பட்டால் எதிர்மறை பலன்கள் ஏற்படும். தெரிந்தவர்களிடம் முறையாக கற்று உச்சரிப்பது நல்லது. ராமநாமத்திற்கு தாரகமந்திரம் என்றொரு பெயர் உண்டு.