Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யானை பிளிறிய மர்மம்! நிறைந்த அமாவாசையில் சுபநிகழ்ச்சி ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆறு! மனமே ஆறு! அந்த ஆண்டவன் கட்டளை ஆறு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2013
05:02

*ஒருவர் பாவச் செயல் புரிந்தால் அது பலரையும் பாதிக்கும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை காலப்போக்கில் சரியாகி விடும். ஆனால் பாவச்செயல் புரிந்தவரை விட்டு, பாவம் ஒருநாளும் நீங்காது.
*தகுதியற்றவர்களுக்குப் பணம் கொடுத்தல், தகுதி உடையவர்களுக்கு உதவ மறுத்தல்- இந்த இரு நடவடிக்கைகளும் நாம் சம்பாதித்த  செல்வத்தைத் தவறாக பயன்படுத்துவதாகவே  கருதப்படும்.
*காமம், கோபம், பேராசை ஆகிய மூன்றும் நரகத்தின் வாயில்களாக அமைந்துள்ளன. இவை நம் ஆத்மாவை களங்கப்படுத்தி விடும்.
*வாய்மை, தர்மசிந்தனை, சுறுசுறுப்பு, பொறாமை கொள்ளாதிருத்தல், பொறுமை, மனவலிமை ஆகிய ஆறு பண்புகளையும் கடைபிடியுங்கள். இவற்றையுடையவனின் மனம் ஆறுதலாக இருக்கும்.
*பெண் மோகம், சூதாடுதல், வேட்டையாடுதல், குடிப்பழக்கம், கடுமையான சொற்கள் பேசுதல், மிகையான தண்டனை கொடுத்தல், செல்வத்தை தவறான வழிகளில் செலவழித்தல் ஆகிய ஏழும் பெரும் அழிவை விளைவிக்கக் கூடியவை.
*யார் திமிருடன் நடந்து கொள்வதில்லையோ, பிறரை இகழ்ந்து தன்னை புகழ்ந்து கொள்வதில்லையோ, உணர்ச்சி வசப்பட்டாலும் தன்னை மறந்து பிறரை கடுஞ்சொல் கூறுவதில்லையோ அவர் எல்லோராலும் விரும்பப்படுபவர் ஆகிறார்.
*பிறர் பெற்றுள்ள செல்வம், அழகு, வீரம், குலகவுரவம், மகிழ்ச்சியான வாழ்க்கை, அதிர்ஷ்டம், பட்டம் பரிசுகள் ஆகியவற்றைக் கண்டு ஒருவர் பொறாமைப்பட்டால், வாழ்நாள் முழுவதும் தீராத நோயாளியைப் போல் மனம் புழுங்கியபடி இருக்க நேரிடும்.
*குடிப்பழக்கம் போன்ற போதைகளை விடச் செல்வ மிகுதியால் ஏற்படும் போதை அதிக அபாயம் கொண்டது. செல்வ போதை கொண்டுள்ளவர் தனக்கு பேரழிவு ஏற்பட்ட பிறகுதான் சுயநினைவிற்குத் திரும்புகிறார்.
*அறிவு குழம்பி அதனால் வீழ்ச்சியடையும் தருணம் நெருங்கி விட்டால், ஒருவருக்கு, தான் செய்யும் அநியாயம் எல்லாம் நியாயமாக தோன்றும்.
*பேசுவதைவிட மவுனமாக இருப்பது சிறந்தது. பேச வேண்டிய அவசியம் ஏற்படும் போது உண்மையே பேச வேண்டும். அந்த பேச்சு பிறருக்கு நன்மை செய்வதாக அமைய வேண்டும்.
*ஏரி வறண்டு போனால் அன்னப் பறவைகள் வெளியேறி விடுவதைப் போல், ஒருவர்  சஞ்சலமான மனதை உடையவராகவும், சுயக்கட்டுப்பாடு அற்றவராகவும், ஆசைகளுக்கு வசப்பட்டவராகவும் இருந்தால், அவருடைய செல்வமும் வசதிகளும் அவரை விட்டு  நீங்கி விடும்.
*வாழ்வில் வளமாக இருக்க விரும்புகிறவர், பொருத்தமான உணவையே, தன்னால் சாப்பிடக் கூடிய உணவையே, சாப்பிட்டால் செரிக்கக் கூடியதையே, செரித்தால் நன்மை தரக் கூடியதையே உண்ண வேண்டும் அல்லது ஏற்க வேண்டும்.
*பணிவின் மூலம் அவமானத்தைத் தவிர்க்கலாம். வலிமையின் மூலம் பெரிய துன்பத்தைப்  போக்கிக் கொள்ளலாம். பொறுமையின் மூலம் கோபத்தை, கோபப்படுபவர்களை  வெல்லலாம். நன்னடத்தையின் மூலம் எல்லா தீய விளைவுகளையும் நீக்கலாம்.
-விதுரர்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar