பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சிறப்பு ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2026 12:09
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், சுவாதி ஹோமம் நடந்தது.
விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் மற்றும் காலை 9:00 மணிக்கு மூலவர் நரசிம்மருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு யாகசாலையில் சுதர்சன தன்வந்திரி ஹோமம், சுக்த ஹோமம் நடந்தது. இதையடுத்து, மதியம் 1:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி மற்றும் கடம் புறப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. மூலவர் லட்சுமி நரசிம்மர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் தலைமையிலான பட்டாச்சாரியார்கள் ேஹாமம் செய்தனர்.