உலகம் தோன்றியது, உயிர்கள் பிறந்தன என்று சொல்கிறோம். தோன்றுதல், பிறத்தல் ஆகியவற்றை சிருஷ்டி என்கிறது சாஸ்திரம். இதைச் செய்பவர் பிரம்மா. அன்றாடம் பகலில் இயங்குவதும், இரவில் உறங்குவதும் மீண்டும் அதிகாலையில் எழுந்து பணிகளைத் தொடங்குவதும் உயிர்களின் இயல்பு. உறக்கத்தில் இருந்து எழுவது மறுபிறவி போன்றது. அதிகாலை 4.30- 6 என்பது பிரம்மா எழும் காலமாக (உலக இயக்கத்தின் சிருஷ்டி துவக்க நேரம்) இருப்பதால் அவரின் பெயரால் பிரம்மமுகூர்த்தம் என்றனர். எந்த தோஷமும் இல்லாத நேரம் இது.