குருவார பிரதோஷம்: நந்தீஸ்வரருக்கு அருகம்புல் சாற்றி சிவ தரிசனம் செய்ய வேண்டியது உடனே நடக்கும்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2026 10:09
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த ஒரு காலமாகும். பிரதோஷ நேரத்தில் சிவன் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையில் நின்று ஆனந்த தாண்டவம் ஆடுவதாக ஐதீகம். இந்த பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது சகல பாவங்களையும் போக்கும். ஜாதகத்தில் உள்ள தோஷங்கள், கடன் தொல்லைகள், மற்றும் நீண்டகால கஷ்டங்கள் நீங்க பிரதோஷ வழிபாடு சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. பிரதோஷ காலத்தில், சூரியன் மறைவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பும், மறைந்த பிறகு ஒன்றரை மணி நேரத்திற்கு பின்பும் உள்ள மாலை நேரம் வழிபாட்டிற்கு உரியது. கோவிலில் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகத்தை தரிசிப்பது சிறந்தது. இன்று சிவ தரிசனம் செய்ய சிவபெருமானின் அருளுடன் குரு பகவானின் அருளும் சேர்ந்து கிடைக்கும். கோவில் செல்ல முடியவில்லையா பணியில் இருப்பவர்கள் இருக்கும் இடத்திலேயே ஈசனை நினைத்து "ஓம் நமச்சிவாய" மந்திரத்தை சொன்னாலும் நற்பலன் கிடைக்கும் இன்று வீட்டில் விளக்கேற்றி குடும்பத்தோடு இஷ்ட தெய்வத்தை வழிபட கர்ம வினைகள் நீங்கி நல்லதே நடக்கும்!