Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மெதுார் பர்வதீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் அருகே சோழர் கால தர்மதேவி சமண சிற்பம் கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 விழுப்புரம் அருகே சோழர் கால தர்மதேவி சமண சிற்பம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

24 செப்
2026
04:09

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பிற்கால சோழர்கால தர்மதேவி சமண சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


விழுப்புரம் அடுத்த கரடிப்பாக்கம் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை முதுகலை ஆய்வு மாணவர்கள் ராகுல், செந்தமிழ்செல்வன், செந்தமிழ்மாறன் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள மாரியம்மன் கோவில் வளாக அரச மரத்தடியில் ஒரு பெண் சிற்பம் இருந்தது கண்டெடுக்கப்பட்டது.  


இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது; இந்த சிற்பத்தை ஆய்வு செய்ததில், சமண இயக்கியான தர்மதேவி என  தெரியவந்தது. இவர் சமண சமயத்தின் 22வது தீர்த்தங்கரரான நேமிநாதரரின் காவல் தெய்வம் ஆவார். இவருக்கு அம்பிகா, அம்பை, அம்பா, குஷ்மாந்தினி,  மற்றும் அம்ர குஷ்மாந்தினி என பல பெயர்களை வைத்து சமணர்கள்  வழிபடுகின்றனர். சிற்பத்தின்  உயரம், 3 அடி ஆகும். தர்மதேவி சுகாசன நிலையில் பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். அவரின் தலையில் அழகான மகுடம் காட்டப்பட்டுள்ளது. மகுடத்தின் முகப்பில் அமர்ந்த நிலையில் நேமிநாத தீர்த்தங்கரர் சிற்பம் காட்டப்பட்டுள்ளது. தேவியின் இரு காதுகளிலும் காதணிகளும், கழுத்தில் முத்துமாலையும், சரப்பளியும் உள்ளது. உபவீதம் காட்டப்பட்டுள்ளது. வலது கரம் நீலோத்பல மலருடனும், இடது கரம் வரத ஹஸ்த நிலையிலும் உள்ளது. தோள்களில் கேயுரம், தோள் வளைகள், கைவளைகள் காணப்படுகின்றன. முழு பட்டாடை அணிந்துள்ள அன்னையின் இடுப்பில் மேகலை காட்டப்பட்டுள்ளது. கால்களில் தண்டைகள், சிலம்புகள் காணப்படுகின்றன.


வலது காலுக்குக் கீழ் தர்ம தேவியின் வாகனமான சிங்கம் உள்ளது. அவரது இரு குழந்தைகளும் பணிப் பெண்ணும் உள்ளனர். தர்ம தேவியின் பின்புறத்தில் திருவாசி அழகாக அமைக்கப்பட்டுள்ளது. திருவாசியின் தலைப்பில் மாமரத்தின் கிளைகள் உள்ளது. இப்பகுதியில் பிற்கால சோழர் காலத்தில் ஒரு ஜினாலயம் இருந்து பின்னாட்களில் அழிந்து இருக்கலாம் என இந்த சிற்பத்தின் மூலம்  அறிய முடிகிறது. இச்சிற்பத்தின் காலம் கி.பி., 13-14ம் நுாற்றாண்டாக இருக்கலாம். அதுமட்டும் அல்லாமல் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள ஊர்களான மாரங்கியூர், எனதிரிமங்கலம், கொரத்தி, கணிசப்பாக்கம் ஆகிய ஊர்களிலும் சோழர்கால தீர்த்தங்கரர் சிற்பங்கள் இன்றும் காணப்படுகின்றன. தென்பெண்ணை ஆற்றங்கரையோர பகுதிகளில்  சமண சமயம் செழித்தோங்கி இருந்து இருப்பது தீர்த்தங்கரின் சிற்பங்களின் மூலம் அறியமுடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar