தனுஷ்கோடியில் ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா; கலைஞர்கள் பங்கேற்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2026 10:09
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. இதில் 500க்கு மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்றனர்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அபிநயா நாட்டியாஞ்சலி அறக்கட்டளை, ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலாத்துறை இணைந்து நேற்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் முதன் முறையாக ராமாயண வரலாற்றை நினைவு கூறும் விதமாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. இதில் ராமர், சீதை, லட்சுமணர் வேடமணிந்தவர்கள் உள்ளிட்ட 500க்கு மேலான நடன கலைஞர் பரதநாட்டியம் ஆடினர். ராமநாதபுரம் , சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்தோர் பங்கேற்றனர்.
காத்திருந்த சுற்றுலா பயணிகள் : காலை 9:00 முதல் 10:00 மணி வரை நாட்டியாஞ்சலி நடந்தது. இதனால் காலை 6:00 முதல் 11:00 மணி வரை தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடை செய்தனர். விடுமுறை நாளையொட்டி ஏராளமான வாகனங்களில் வந்தவர்கள் ராமேஸ்வரம் அருகே புதுரோடு எனுமிடத்தில் காத்திருந்தனர்.