பதிவு செய்த நாள்
28
செப்
2026
02:09
ஊத்துக்கோட்டை: பவுர்ணமி நாளை ஒட்டி, பவானியம்மன் கோவிலில் , உற்சவர் அம்மன் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அம்மனை தரிசனம் செய்வர்.
நேற்று முன்தினம் இரவு பவுர்ணமி நாளை ஒட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முன்னதாக, பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.