சோனை கருப்பண்ண சுவாமி கோயிலில் 2ம் ஆண்டு உற்ஸவத்தில் விளக்கு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2026 12:09
சாயல்குடி: -சாயல்குடி அண்ணாநகரில் உள்ள சோனை கருப்பண்ண சுவாமி கோயிலில் 2ம் ஆண்டு உற்ஸவத்தில் விளக்கு பூஜை நடந்தது.
நரிப்பையூர் அருகே கடலில் தீர்த்தம் ஆடி அத்தி மரத்து காளியம்மன் கோயிலில் இருந்து வேல் குத்தி அக்னிசட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் உலா வந்தனர். மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொங்கல் வைத்து உச்சி ஜாம பூஜை நடந்தது. ஏற்பாடுகளை சாயல்குடி அருந்ததியர் உறவின்முறை சங்கத்தினர் செய்தனர்.