திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாள்: தங்க நாக வாகனத்தில் சுவாமி உலா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2026 11:11
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் நான்காம்நாள் காலை உற்சவத்தில், தங்க நாக வாகனத்தில் சந்திரசேகர் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவில், நான்காம் நாள் தீப திருவிழாவில் இன்று அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து, காலை உற்சவத்தில், தங்க நாக வாகனத்தில் சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர், வந்தனா கார்க் எஸ்பி உதயகுமார், கோவில் இணை ஆணையர் பரணிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.