செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, விடுமுறை, சுபமுகூர்த்தம், கோவில் விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செ ல்கின்றனர். அதேபோல், ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி திருப்போரூர் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, தி.நகர், பிராட்வே உட்பட பல்வேறு இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்திற்கு தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மேற்கண்ட கந்தசுவாமி கோவில், பேருந்து நிலையப்பகுதிகளில் ஆதரவற்றோர் ஏராளமானனோர் தங்கியுள்ளனர். அதேபோல், மனநிலை பாதிக்கப்பட்டோரும் தங்கியுள்ளனர். இவர்கள் கோவில் வளாகத்தை அசுத்தப்படுத்தி, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். மேலும், கந்தசுவாமி கோவில் பகுதியில் உள்ள ஆதரவற்றோர், பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையினர் மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு செய்து அதரவற்றோரை மீட்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.