Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை அய்யா வைகுண்ட தர்மபதியில் ... சோலைமலை முருகன் கோவில் திருப்பணியில் சிருங்கேரி மஹா சுவாமிகளின் அளப்பரிய பங்கு சோலைமலை முருகன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா: அக். 9ல் நடக்கிறது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா: அக். 9ல் நடக்கிறது

பதிவு செய்த நாள்

02 அக்
2026
09:10

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் எடுக்கும் விழா நடக்கிறது.


நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுவாமி தனது கரத்திலுள்ள வேல் மூலம் மலைமீது பாறையில் கீறி, கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கியதை நினைவு கூரும் வகையிலும், மழை வேண்டியும், திருப்பரங்குன்றம் கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள தங்க வேல் மலைமேல் கொண்டு செல்லும் விழா அக்.9ல் நடக்கிறது. அன்று தங்க வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து மலர்களால் அலங்கரிக்கப்படும். கிராமத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டு, பல்லக்கில் ரத வீதிகளில் வேல் எடுத்துச்செல்லப்பட்டு மலைமேல் கொண்டு செல்லப்படும். அங்கு சுப்ரமணியர் கரத்தில் வேல் சேர்ப்பிக்கப்படும். உச்சி கால நேரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், நத்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு பூஜை முடிந்து, கோயில் சிவாச்சார்யார்களால் வேல், சுனை தீர்த்தத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டு அபிஷேகங்கள் நடக்கும். கிராமத்தினர் சார்பில் 105 படி அரிசியில் கதம்ப சாதம் தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்படும். மாலையில் வேல் புறப்பாடாகி மலை அடிவாரத்தில் உள்ள பழநி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்படும். இரவு வேல், சுவாமிக்கு அபிஷேகங்கள், தீபாராதனைகளுக்குப்பின்பு பூப்பல்லக்கில் வேல் புறப்பாடாகி வீதி உலா முடிந்து சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்தில் மீண்டும் சேர்ப்பிக்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில்  ஐந்தாம் நாள் காலை  உற்சவத்தில், ... மேலும்
 
temple news
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காப்புக் ... மேலும்
 
temple news
மூணாறு: சபரிமலை சீசன் துவங்கிய நிலையில், ஐய்யப்ப பக்தர்கள் வருகையால் சத்திரம் களை கட்டியது.இடுக்கி ... மேலும்
 
temple news
மருதமலை: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வேண்டி, சிறுமி ... மேலும்
 
temple news
அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி கோயிலில் வீற்றிருக்கும் குழந்தை ராமரான ஸ்ரீராம்லல்லாவை தரிசிக்க, நாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar