Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவிலில் தங்க கருட வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநின்றவூர் சிவன் கோவில் சொத்தை குத்தகைக்கு விட்டதா மர்ம கும்பல்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநின்றவூர் சிவன் கோவில் சொத்தை குத்தகைக்கு விட்டதா மர்ம கும்பல்?

பதிவு செய்த நாள்

04 அக்
2026
06:10

திருவள்ளூர்: திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 25 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து குத்தகைக்குவிட, மர்ம நபர்கள் முயற்சி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளின் கையெழுத்தை அக்கும்பல் போலியாக போட்டு மோசடிக்கு முயன்றுள்ளது. கிராம மக்கள் உஷார்படுத்தியதால் விழிப்படைந்த கோவில் நிர்வாகம், போலீசில் புகார் அளித்துள்ளது.


திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர், சிவன் கோவில் தெருவில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பாள் சமேத ஸ்ரீ இருதயாலீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் திருப்பணிகள் முடிந்த நிலையில், ஜனவரியில் கும்பாபிஷேகம் நடந்தது. திருநின்றவூர் சரத் கண்டிகை மற்றும் கொசவன்பாளையம் பகுதிகளில் கோவிலுக்கு சொந்தமாக, 5 ஏக்கர் நிலங்கள் உள்ளன.இதில், சரத் கண்டிகை பகுதியில் உள்ள நிலம் கோவில் நிர்வாகத்தில் முறையாக அனுமதி பெற்று, குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.


இந்நிலையில், அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக போட்டு, போலி ஆவணங்கள் தயாரித்து, கொசவன் பாளையத்தில் உள்ள, 25 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலத்தை குத்தகைக்கு விட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள், கோவில் நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர். இதையடுத்து, திருநின்றவூரை சேர்ந்த ஜெயக்குமார், அஸ்வின் குமார், தேவநாதன் உள்ளிட்ட சிலர், கோவில் நிலங்களை போலி ஆவணங்கள் தயாரித்து, குத்தகைக்குவிட முயற்சிப்பதாவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சிந்துமதி, திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, திருநின்றவூர் போலீசார் ஜெயக்குமார், அஸ்வின் குமார், தேவநாதன் உள்ளிட்டோரை விசாரித்தபோது, சசிகுமார் என்பவர் அரசு அதிகாரிகள் கையெழுத்தை போலியாக போட்டு, போலியான ஆவணங்கள் தயார் செய்தது தெரிந்தது.


திருநின்றவூர் போலீசார், சசிகுமாருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.


இதுகுறித்து, கோவில் நிர்வாகிகள் கூறியதாவது: தற்போதுவரை கோவில் நிலங்கள் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கவில்லை. ஆனால், கோவில் நிலத்தை குத்தகைக்குவிட, சிலர் முயற்சி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதில், யாரேனும் பயன் அடைந்துள்ளனரா என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 
temple news
சூலூர்: மழை வளம் பெருக வேண்டி, விநாயகர், கிருஷ்ணருக்கு பொங்கல் வைத்து கிராமங்களில் வழிபாடு நடந்தது.பருவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar