Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் நிலம் மீட்பு அரசியல் நாடகமா: ... தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்; காஞ்சி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆகமவிதிகளுக்குறிய திருக்கோயில்கள் குறித்துமக்கள் கருத்துகள் தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆகமவிதிகளுக்குறிய திருக்கோயில்கள் குறித்துமக்கள் கருத்துகள் தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

பதிவு செய்த நாள்

04 அக்
2026
10:10

விழுப்புரம்: தமிழகத்தில் ஆகமக் குழுவினால் கண்டறியப்பட்ட ஆகமவிதிகளுக்குறிய திருக்கோயில்கள் குறித்து, பொதுமக்கள் கருத்துகள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் அக்.10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் உத்தரவுகளின்படி, தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில், ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில்களை கண்டறிய, அரசால் கடந்த 6.10.2025 அன்று 5 நபர்களை கொண்ட குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது. திருக்கோயில்களின் ஆகமம் குறித்த விவரங்கள், தொடர்புடைய இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களால், குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், குழுவினால் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது.


ஆகமக் குழுவினரால் பரிசீலிக்கப்பட்ட 34,971 எண்ணிக்கையிலான திருக்கோயில்கள் தொடர்பான விவரங்கள், அறநிலையத் துறையின் www.hrce.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டு, இது குறித்த விவரங்களில், பொதுமக்கள் விடுதல் ஏதேனும் இருப்பின் அல்லது ஏதேனும் கருத்துரு இருப்பின், அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்பட்டது.இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கிட ஆகமக் குழுவினால் முடிவு செய்யப்பட்டுள்ளது.


எனவே, திருக்கோயில்கள் குறித்த விவரங்களில், விடுதல் ஏதேனும் இருப்பின் அல்லது ஏதேனும் கருத்துரு இருப்பின், ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவிற்கு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம், உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-–34. என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது துறையின் இணையதளம் வாயிலாகவும், வரும் அக்.10ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தெரிவித்திட குழுவினால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar