திண்டிவனம் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2026 11:10
திண்டிவனம்: புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, லட்சுமி நாராயண பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. திண்டிவனத்திலுள்ள கே.ஆர்.எஸ்.அம்மா மகாலில், லட்சுமி நாராயண பெருமாள் திருக்கல்யாண வைபவம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி, நேற்று காலை லட்சுமி நரசிம்மர் சுவாமி சன்னதியில் இருந்து பாகவத உத்தமர்கள், ஆண்டாள் கோஷ்டிகள், தாய்மார்கள் ஊர்வலமாக , திருமண மகாலுக்கு வந்தனர். தொடர்ந்து மகாலில், லட்சுமி தாயாருக்கும், நாராயண பெருமாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ஜக்காம்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமாரின் பக்தி சொற்பொழிவு நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.