திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூரில் மட்டுவார் குழலி அம்மன் உடனுறை சேயுமானவர் கோயில் உள்ளது. இக் கோயிலில் சிறுவர், சிறுமிகளுக்கு தேவாரம், திருவாசகம் பாடம் கற்பறிக்கும் பயிற்சி வகுப்பு நடந்தது.
ஆவடையார்கோயிலை சேர்ந்த சிவனடியார் குமரேசன் குழந்தைகளுக்கு பன்னிரு திருமுறை பாடல்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை எளிமையான முறையில் கற்றுக் கொடுத்தார். சைவசமய பண்பாட்டையும், ஆன்மிக நெறிகளையும் குழந்தைகளுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த சிறப்பு பயிற்சி வகுப்பை கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.