பரமக்குடி: பரமக்குடி காக்கா தோப்பில் அமைந்துள்ள சண்முகத்தடிமை வேலு சுவாமிகளின் 32ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. ஹோமங்களுடன், சிவலிங்கத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகம் அலங்காரத்தில் தீபாராதனையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
பஜனைகள் நாம சங்கீர்த்தனம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. குருநாதர் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள், சீடர்கள், பக்தர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.